”பால்பொழியும் பௌர்ணமி நிலவில்
யாழ்மீட்டும் யமுனை நதிக்கரையில்
காதல் கசிந்துருகி கட்டிடமாய் உயர்ந்து நிற்கும்
வெண்பளிங்கு மாளிகையை
விழியினால் பருகினாயா?”
யாழ்மீட்டும் யமுனை நதிக்கரையில்
காதல் கசிந்துருகி கட்டிடமாய் உயர்ந்து நிற்கும்
வெண்பளிங்கு மாளிகையை
விழியினால் பருகினாயா?”
ரசனையும் குறும்பும் போட்டி போட கண்ணடித்துக் கேட்டவளை புன்னகையுடன் நோக்கி விட்டு நக்கலடிக்கும் குரலில், ”வாம்மா மின்னல்! மொத்த ஸ்டேடியமும் முக்காடு போட்ருக்கது உன்னால தானா?” என வம்பிழுக்க ”ஆமாம்டா ஆமாம் தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் எல்லார்க்கும் பெய்யும் மழைனு படிச்சதில்லயா? ”என்று திருப்பிக் கொடுத்தாள்.” படிச்சுருக்கேன் படிச்சுருக்கேன் அதுவும் படிச்சுருக்கேன் இன்னோண்ணும் கேள்வி பட்டுருக்கேன் கூடா நட்பு கேடாய் முடியும்னு” என்று மிகுந்த சோகமான குரலில் பாவமாய் கூறியவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே,
”ஹா ஹா கேடு முடிஞ்சதா இல்லியா?” என்று குவிஸ் போட்டியில் கேட்பது போன்ற பாவனையுடன் வினவ ”எப்புடி முடியும் அதன் மனுஷ ரூபத்துல வந்து நிக்கிறியே” என்று கடுப்படித்தான் ”ஏன் சார் கேட்ட கைத்தட்டி கூப்புடுரீங்க? கால் பண்ணி கூப்ட்ரீங்க?” என்று பதிலுக்கு அவளும் கடுப்பாக ”ம்ம் ஊத்துற மழையில ஒலிம்பிக்தீபம் அணைஞ்சுப்போச்சம் வெளெக்கேத்த ஒரு வெளக்கெண்ண வேணும்னாங்க அதன் கூப்பிட்டேன் ஆளப்பாரு ” என்றபடி நடக்க ஆரம்பித்தான். சட்டென்று அவனைப்பிடித்து நிறுத்தி
”அப்படிங்களா சார் வெளக்கெண்ண வேலுமாணிக்கம் கடைல விக்குதாம் போய் வாங்கிகோங்க நான் கிளம்பறேன்” என்றபடி திரும்பி நடக்க ஆரம்பித்தாள் ”ஓய் வெட்டி பந்தா வேலைக்காகாது போ போய் ரெடியாகு. இன்னிக்கு புதுசா ரெண்டு பேரு கோர்ட்ல வந்து நிக்கிறாங்க அவங்கள்ட்ட உன் வீரத்த காமி போ” என்றவாறு அவளுடைய கையில் இருந்த ராக்கெட்டை வாங்கிக் கொண்டு ட்ரெஸ்சிங் அறையை நோக்கித் தள்ளினான்.
”இருடா இரு டைனோசர்க்கு டிஜிட்டல்னா அனகொண்டாவுக்கு அனிமேஷன் அப்ப இருக்கு உனக்கு கதம் கதம்” என்றுக் கறுவிக்கொண்டே நடக்க, ”போ போ போய்ட்டே இரு சீனோட்டி சிண்ட்ரெல்லா” என்று பரிகசித்தான் ”சீ பே” என்றவாறு மறுபடியும் அவனை நோக்கித் திரும்ப
”ஜெனிஃபர், சூர்யா ரெண்டு பேரும் இங்க என்ன பண்றிங்க?” என்ற குரலில் இருவரும் திடுக்கிட்டனர் அங்கு நின்றுக்கொண்டிருந்த கோச்சைப் பார்த்து இருவரும் அசடு வழிய ”நத்திங் மாஸ்டர் ஜஸ்ட் டெக்னிக் டிஸ்கஷன் இல்லியா சூரி” ” ஆமாம் மாஸ்டர் ஜெனி சொல்றது நிஜம்தான் மாஸ்டர்” என்று உளரி கொட்டினர். அவரும் சிரித்தபடி, "போங்கப்பா நெட் ப்ராக்டீஸ்க்கு டைம் ஆச்சு கெட் ரெடி” என்று விட்டு அகன்றார்.
இருவரும் சிரித்தபடி கிளம்பினர். கோர்ட்டுக்கருகில் வந்தவுடன், “என்னடா நீயும் நானும் மட்டும் தான?இன்னிக்கு யாரோ வந்துருக்காங்கன்னு பில்டப் குடுத்த” எனக் கேட்க பின்னாலிருந்து, ”ஹாய் நாங்களும் வரலாமா?” என்றபடி ஒருவன் வந்து நின்றான். சூர்யா திரும்பி ஜெனிஃபரைப் பார்க்க, அவள் ”ஓக்கே” என்றாள்.“பட் மூணு பேரு தானே இருக்கிறோம் எப்படி டபுள்ஸ்?....”என்று இழுத்தபடி கேட்க “வெயிட் எ மின் ப்ளீஸ்” என்றுவிட்டு ”ஹேய் டான் கமான் கிம்மி எ ஹேண்ட்” என்று கூப்பிட, டான் என்று அழைக்கபட்டவன் அங்கிருந்து எழுந்து வந்தான். ஜெனிக்கு அப்பொழுது தெரிந்து இருக்கவில்லை இவன் அவள் வாழ்க்கையை புரட்டி போட வந்தவன் என்று.
(தொடரும்..)
நல்வரவு...
ReplyDeleteword varification'ஐ நீக்கி விடுங்கள்.
ReplyDeleteMohamed Faaique said...
ReplyDeleteநல்வரவு...
--- நன்றி
Mohamed Faaique said...
ReplyDeleteword varification'ஐ நீக்கி விடுங்கள்.
---- எப்படி செய்ய வேண்டும்?