பாகம் 1
கொஞ்சம் கொஞ்சமாக விளையாட்டு சூடு பிடிக்க ஆரம்பிக்க சுற்றிலும் கூட்டம் சேர ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்தில் இருவரில் முதலில் வந்தவன் வெளியேற சூர்யா ஜெனியை கைகாண்பித்தான் உடனே மற்றவன், ”,என்ன மிஸ்ஸி, மட்டையா? எனக் கேட்க, ரோஷம் வந்தவளாய் ஜெனிஃபர் முகம் சிவக்க ”நீ போ சூரி ஐ வில் டேக்கேர்” என்றாள். இதைக் கேட்டு அவன் சிரித்தான். சூர்யா மெதுவாக ஜெனிஃபரின் அருகில் வந்து, ”வேண்டாம் ஜெனி, ஆள் முரடன் மாதிரி இருக்கான் நீ கிளம்பு” என ”இல்ல நான் விளையாடிட்டு தான் வருவேன்” என்று அழுத்தமாக கூறிவிட்டு ஆட்டத்தை தொடர்ந்தாள்.
இருவரும் சளைக்காமல் விளையாட ஆட்டம் விறுவிறுப்பாக நகர்ந்தது ஆளாளுக்கு விசில் அடித்து சத்தம் போட்டு இன்னும் விளையாட்டை சுவாரஸ்யமாக்கினார்கள். “என்ன மிஸ்ஸி உனக்கு நிறைய ஃபேன்ஸ் போல” என்று அவன் கேட்க வழிப்பம் காட்டி. “ப்ரேக்” என்றுவிட்டு வந்தாள். ப்ரேக்கில் தண்ணீர் அருந்தவந்தவளிடம், ”ஓக்கே ஜெனி போதும் நீ கிளம்பு” என்று சூரி கூற, ”இருக்கட்டும் இன்னிக்கு நானா அவனான்னு பாக்கலாம்” என்றாள் ”லூஸு அவங்களாம் நல்ல ப்ளேயர்ஸ் ரொம்ப நாள் விளையாட்ரவங்க அவங்க கூட உன்னால எப்டி முடியும்?” என்று ஆதங்கமாய் கேட்டவனை முறைத்து
”ஹல்லொ நீ வேடிக்கை மட்டும் பாரு மேன்”என்றுவிட்டு மீண்டும் விளையாட துவங்கினாள். பந்தை திருப்பி அடிக்க எத்தனித்த போது அது மிஸ்ஸாகி தலையில் மாட்டியிருந்த கிளிப்பில் பட்டு கிளிப் தெறிக்க சடாரென்று காலையில் ஷாம்பு போட்டு அலசி ட்ரையரில் காயாவைத்த துளி கூட எண்ணைப்பசையற்ற சுருள் கூந்தல் விரிந்து பரவ, என்ன செய்வதென்று ஒரு வினாடி தடுமாறி, அடுத்த நொடி “எக்ஸ்கயூஸ்மி” என்றபடி சட்டென்றுவிட்டு ட்ரெஸ்சிங் அறைக்குள் நுழைந்தாள் ஜெனிஃபர்.
”ச்சே எண்ணை வச்சு பேண்ட் போட்டு வந்துருக்கனும்” என்று முனகிக்கொண்டே கூந்தலை கிளிப் போட்டு விட்டு வெளியேற நினைத்தவள் மொபைலைப் பார்க்க அப்பாவின் மிஸ்டுகால் மஞ்சுவின் மெசேஜ். மஞ்சு எதுக்கு மெசேஜ் பண்ணீர்க்கா என்றெண்ணியபடி மெசேஜைப் பார்க்க ”யுவர்ஸ் டாட் வெயிட்டிங்” என்று டிஸ்ப்ளே ஆனது.“மை காட்” என்றபடி நேரத்தைப் பார்க்க ஒரு மணி நேரத்திற்கும் முன்பாக மெசேஜ் வந்திருந்தது.
போச்சு இன்னிக்கு எவ்ளோ வாங்கி கட்டணுமோ என்று எண்ணிக்கொண்டே தன்னுடைய உடமைகளை எடுத்துக் கொண்டு வெளியில் வந்து சூர்யாவிடம் சொல்லிவிட்டு போகலாம் என கோர்ட் நோக்கி நடந்தவளின் கண்களில் முதலில் பட்டவர் அவளுடைய தந்தை! “டாட். நீங்க... இங்க…” என்று தடுமாற ”வா போகலாம்” என்று விட்டு விறு விறு என்று முன்னால் நடந்தார்.
தங்கியிருக்கும் வீட்டிற்கு செல்லும் வரை ஒன்றும் பேசவில்லை அவர் இந்த ஒசாமாவிடம் என்ன சொல்லி சமாளிக்கலாம் என்றெண்ணியபடி ஜெனிஃபரும் பக்கா கற்பனைகளை செய்துக் கொண்டே வந்தாள் ஆனால் வீடு வந்து சேர்ந்தும் அவளுடைய அப்பா ஒன்றும் பேசாமல் போகவே அவளாகவே “ டாட் வந்து நான்...”என்று ஆரம்பிக்க கையை உயர்த்தி அவளை நிறுத்தும்படி சைகை காட்டிவிட்டு
“உள்ளூர்லயே நல்ல நல்ல காலேஜஸ் இருந்தும் உன்ன இவ்ளோதூரத்துக்கு அனுப்பி படிக்க வச்சுருக்கேன்ன நீ ஆசைப்பட்டியேங்கிற ஒரே காரணத்துனால தான் ஆனாஇங்க வந்தும் நீ பழைய மாதிரியே ஊர் சுத்துறது, பசங்களோட போட்டி போட்டு வம்படிக்கிறதுன்னு தான் இருக்குற எத்தனையோ தரம் உன்ட்ட நான் சொல்லிட்டேன் இனியும் சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல நீ சின்ன குழந்தையும் இல்ல சொல்லிதான் புரியனும்ங்ற அளவுக்கு. அதனால நீயே முடிவு பண்னிக்கோ நான் வர்றேன்” என்று விட்டு சென்றுவிட்டார்.
(தொடரும்..)
No comments:
Post a Comment