மறு நாள் கிளம்பும் வரை எதுவும் பேசவில்லை அவளாக பேசினாலும் கேட்ட கேள்விக்கு மட்டும் ஒற்றை வார்த்தை பதில் சொல்லிவிட்டு முடித்துக் கொண்டார். மறு நாள் காலேஜுக்குள் நுழைந்தவுடன், அவளுக்காகவே காத்திருந்தவன் போல சூர்யா வந்து, படபடவென்று, ” ஜெனி என்னாச்சு ஏன் நேத்து சொல்லாம போயிட்ட கால் பண்ணா சுவிட்ச் ஆஃப்னு வந்தது
எனி ப்ராப்ளம்?” என்று மூச்சு விடாமல் கேட்க, சற்று நேரம் அமைதிப் படுத்திக் கொண்டு நிதானமாக ”அப்டிலாம் ஒண்ணும் இல்ல சூரி டயர்டா இருந்துச்சு அதான் வேறஒண்ணும் இல்ல” என்று ஒவ்வொரு வார்த்தையாக கூறினாள். அவளை விசித்திரமாக பார்த்து விட்டு,
”சரி சரி இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமா க்ரௌண்டுக்கு வந்துடு ஆக்ரால எடுத்த பிக்சர்ஸ்லாம் பிரிண்ட் பண்ணி வந்துடுச்சு. பௌர்ணமி, யமுனை, தாஜ் மூணோட கெமிஸ்ட்ரியும் எப்புடிவொர்க்கவுட் ஆயிருக்குன்னு பார்த்தீனா அசந்துப் போயிடுவ” என்றபடி கண் சிமிட்ட, ஒரு வினாடி தடுமாறி
”இல்ல சூரி எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு நான் வரல. நீ ஃபோட்டோஸ் எடுத்துட்டுவா நான் லேப் அவர்ல பாத்துக்குறேன்” என்ற கூறிக் கொண்டே நடக்கஆரம்பித்தாள். “எனிதிங்க் ராங் நாமா கேண்டீன் போலாமா ஜெனி? என்றபடி அவசர அவசரமாக அவளைப் பின்தொடர்ந்தான்.
“ ஒருவாட்டி சொன்ன உனக்கு புரியாதா ”சட்டென்று திரும்பி கோபத்தில் குரல் உயர்த்த “ஓகே ஓகே டேக் கேர் ஜெனி அயாம் ஆல்வேய்ஸ் தெர் ஃபார் யூ டோன் ஃபர்கெட்” என்று விட்டு பதில் எதிர்பார்க்காமல் சூர்யா சென்று விட ஜெனிஃபருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது மறுபடியும் அவனைக் கூப்பிட்டு சாரி கேட்க்கலாம் என்று நினைத்தவள் வேண்டாம். அப்புறம் என்ன ஏது என்று துளைக்க ஆரம்பித்து விடுவான்.. மறுபடியும் டென்சனாக வேண்டியிருக்கும் என்று விட்டு விட்டாள்.
லேப் அவரிலும் அவனுடன் சாதாரணமாக பேசும் அளவுக்கு மனோ நிலை இல்லாததால் ஃபோட்டோவை மட்டும் வாங்கிக் கொண்டு வந்துவிட்டாள் அவனும் ஏதோ கேட்க வாயெடுத்துவிட்டு அவளாகவே சொல்லட்டும் என்று விட்டு விட்டான். அதைப் பார்த்து கஷ்டமாக இருந்தாலும் இனி அப்பா மனசு கஷ்டப்படும்படி நடந்துக்ககூடாது என்று தீர்மானித்துக் கொண்டாள்.
இப்படியாக அந்த வரமும் அதற்கடுத்த வாரமும் ஓடியது. ஜெனி எல்லரிடமும் நன்றாக பேசினாலும் சூர்யாவிற்கு தெளிவாக புரிந்தது ஏதொ ஒன்று சரியில்லை தன்னைவிட்டு ஜெனி விலகிக்கொண்டிருக்கிறாள் என்று. ஆனாலும் அவளிடம் கேட்கும் துணிவு அவனுக்கு வரவில்லை ஏனெனில் என்ன தான் நன்றாக பேசினாலும் சில விஷயங்களில் ஜெனியை கட்டாயப்படுத்தினால் மூஞ்சிலடித்ததுப் போல் பதில் சொல்லிவிடுவாள் சோ எதுக்கு பிரச்சினை என்று விட்டு விட்டான்.
ஒரு நாள் மாலை நேரம். க்ரௌண்டுக்கு போய் திரும்பி வரும் வழியில் ஜெனி நின்றுக்கொண்டிருந்தாள். சூர்யா சந்தோஷமாக “என்ன அதிசயம் காத்து இந்தப்பக்கம் அடிக்குது போல “ என்று விளையாட்டுப் போல் கேள்வி கேட்க ஜெனி அமைதியாக நின்றாள். ஒரு கேள்விக்கு பத்து பதில் சொல்லும் ஜெனியா இப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஜெனி ”சரி நான் கிளம்ப்றேன் என்று விட்டு திரும்ப நடக்க துவங்கினாள் ”ஏன் விளையாட வர மாட்டேங்குற ?” என்று கேட்டபடி கூட நடக்க துவங்கினான் ”இல்ல இனி நான் விளையாடற ஐடியா இல்லப்பா” என்று மிக மெதுவான குரலில் கூறினாள் ”ஏன்?” என்று எதிர்ப்பார்க்காத அதிர்ச்சியில் கேட்டான்.